பரசங்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் முன்பக்க கதவில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அளுத்கம, தாருசலம் முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் கம்பிரிஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.