வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் – யாழ்ப்பாணம் அருள்மிகு காமாட்சியம்மன் (நாச்சிமார்) திருக்கோயில்
யாழ்ப்பாண நன்னகரில் கோயில் கொண்ட தாயே
பாழ்படா நிலைதந்து வாழ்வளிக்க வருவாய்
நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே
எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய்
கேட்கும் வரம் தந்தெம்மை ஆட்சி செய்யும் தாயே
குறையண்டா நிலைதந்து வாழ்வளிக்க வருவாய்
நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே
எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய்
தமிழ் முழங்கும் திருநகரில் கோயில் கொண்ட தாயே
தவறில்லா வாழ்வு தந்து வாழ்வளிக்க வருவாய்
நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே
எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய்
துன்பங்கள் துடைத்தெறிய வந்தமர்ந்த தாயே
துணிவு கொண்ட வாழ்வு தந்து வாழ்வளிக்க வருவாய்
நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே
எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய்
ஆறுதலைத் தந்து அரவணைக்கும் எங்கள் திருத்தாயே
அச்சமில்லா வாழ்வு தந்து வாழ்வளிக்க வருவாய்
நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே
எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய்
அறிவு தந்து ஆற்றல் தந்து வழிகாட்டும் தாயே
அறம் தவறா வாழ்வு தந்து வாழ்வளிக்க வருவாய்
நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே
எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.