HTML tutorial

கொட்டகலை சிந்தனை பவுண்டேஷன் மாணவர்களுக்கன பட்டமளிக்கு விழா கடந்த 21/01/2023 அன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது கொட்டக்கலை ரிஷிகேஸ் மண்டபத்தில் சிந்தனை பவுண்டேஷன் நிறுவுனர் ரமேஷ் தலமையில் காலை 10 மணிக்கு அரம்பமானது.

பெருந்தோட்ட பகுதிகளில் உயர்தரம் முடித்த மாணவர்களின் தொழில் மற்றும் வாழ்கை விருத்தியை மேம்படுத்தும் முகமாக ஒழுங்குப்படுத்திருக்கும் ஒருவருட கால பயிற்ச்சி நெறியை முடித்த மாணவர்களுக்கே குறித்த பட்டமளிப்பு விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பட்டமளிப்பு வழங்கப் பட்ட அத்தனை மாணவர்கள் சிங்களம் ,ஆங்கிலம், தமிழ் மற்றும் தொழிநுட்ப்ப பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு ,மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய மற்றும் தங்களுடைய கலை திறமைகளை வெளிப்படுத்த கூடிய மாணவர்களாக இருக்கின்றனர் என்பது விசேட அம்சமாகும்.மேலும் குறித்த பாடநெறிகள் அனைத்தும் இலவசமாகவே சிந்தனை பவுண்டேஷன் மூலம் கற்று கொடுக்கப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.