HTML tutorial

 

தங்கக்கலை இல 02 தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் அவர்களது சமூகத்திற்க்கும் பெருமையை தேடித்தந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு பரீட்சைகள் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 2022ம் ஆண்டுக்கான பெறுபேறுகள் வெளியாகியிருந்தது. மேலும் இப்பாடசாலை 94% சதவீத பெறுபேற்றை பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் கிருஷ்ணகுமார் வகுப்பாசிரியர் கிறிஸ்டோபர், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

– ராசையா கவிஷான் –