ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்களின் புதிய தரப்படுத்தல் பட்டியலில் முதலாவது இடத்துக்கு இந்திய வீரர் சிராஜ் சமத் முன்னேறியுள்ளார்.

கடந்த 12 மாத காலப்பகுதியில் வீரர் சிராஜ் சமத் வெளிப்படுத்தியே  ஆற்றலே இதற்கு காரணமாகும்.

இவர் 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பிரதி நிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவர் இந்திய அணியில் கடந்த பெப்ரவரி மாதம் இணைந்தார். இந்த காலப்பகுதியில் இருந்து இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சாளராக இவர் திகழ்ந்து வருகிறார்.

இதேவேளை ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இந்த தரப்படுத்தல் பட்டியலில் முதல் 20 இடங்களில் இலங்கை பந்துவீச்சாளர்கள் இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் வனிந்து ஹசரங்க 23 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.