HTML tutorial

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், நல்லூர் அருள்மிகு கயிலாசநாத சுவாமிகள் திருக்கோயில்

தமிழர் தலைநகரில் நின்றருளும் கணபதியே
தர்மநெறி நின்றெம்மை வாழவைப்பாய் யானைமுகா
என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு

தீராத வினைகளைத் தீர்த்தருளும் கணபதியே
திக்கின்றித் தவிக்கும் நிலை அண்டாது வாழவைப்பாய் யானைமுகா
என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு

சிவனாரின் கருவறையை அருகு கொண்ட கணபதியே
சினமில்லா மகிழ் வாழ்வைதந்து வாழவைப்பாய் யானைமுகா
என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு

வழித்துணையாயிருந் தெம்மை வாழவைக்கும் கணபதியே
வற்றாத கருணையினைத் தந்தெம்மை வாழவைப்பாய் யானைமுகா
என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு

உமையம்மை திருமகனாய் உதித்தவரே கணபதியே
உறவுநிலை குன்றாநிலை தந்தெம்மை வாழவைப்பாய் யானைமுகா
என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு

நம்பியுன் அடிபணிவோர் நலன் காக்கும் கணபதியே
நம்பிக்கை மனவுறுதி தந்தெம்மை வாழவைப்பாய் யானைமுகா
என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.