ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் மரணம்!
கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் மரணமடைந்துள்ளார்.
அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு ரயிலில் திரும்ப முற்பட்ட போது கொழும்பு தெஹிவளை பகுதியில், ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார்.