தங்கக்கலை இல 01 தமிழ் மகா வித்தியாலயம் பாடசாலையில் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சாதனை!
தங்கக்கலை இல 01; தமிழ் மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெற்றோருக்கும் சமூகத்திற்க்கும் பெருமையை தேடித்தந்துள்ளனர்.
பாடசாலை வரலாற்றில் 70புள்ளிகளுக்கு அதிகமானமான மாணவர்கள் புள்ளிகள் பெற்றுள்ளதோடு 88 % சதவீத பெறுபேற்றை பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு பிரதீப்குமார் வகுப்பாசிரியர் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.