HTML tutorial

பசளை கொள்வனவு இம்முறை முழுமையாக மாவட்ட மட்டத்தில் இடம்பெறுகிறது.

இதற்காக மாவட்ட செயலாளர்கள் முன்னின்று செயற்படுகின்றனர் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பசளையை பகிர்ந்தளிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ள ,அதேவேளை, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். மிகவும் வெளிப்படையாக இந்த நடவடிக்கைகயை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக  அமைச்சர் கூறினார்.

பசளை கொள்வனவுக்கு தேவையான நிதி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் , ஒரு ஹெக்டெயருக்காக பத்தாயிரம் ரூபாவும் இரண்டு ஹெக்டெயர்களுக்காக 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். வங்கிகளில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் எதிர்வரும் சில தினங்களில் இந்நிலைமை சீராகும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.