கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு- தேற்றாத்தீவு, கொம்புச்சந்தி அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

தேற்றாத் தீவினிலே கோயில் கொண்ட திருமகனே
தெளிவான மனவுறுதி தந்தெம்மை வாழவைப்பாய்
உன்னருளே எமக்கென்றும் உய்தி தருமைய்யா
கொம்புச் சந்தி இருந்தருளும் பிள்ளையாரே துணையிருப்பாய்

கிழக்கிலங்கை கோயில் கொண்டு கோலோச்சும் திருமகனே
கிலேசமில்லா நல்வாழ்வைத் தந்தெம்மை வாழவைப்பாய்
உன்னருளே எமக்கென்றும் உய்தி தருமைய்யா
கொம்புச் சந்தி இருந்தருளும் பிள்ளையாரே துணையிருப்பாய்

மீன்பாடும் திருநாட்டில் கோயில் கொண்ட திருமகனே
மீட்சி தந்து நல்வழி தந்தெம்மை வாழவைப்பாய்
உன்னருளே எமக்கென்றும் உய்தி தருமைய்யா
கொம்புச் சந்தி இருந்தருளும் பிள்ளையாரே துணையிருப்பாய்

வளங் கொண்ட மாநிலத்தில் கோயில் கொண்ட திருமகனே
வளம் தந்து பெருமை தந்தெம்மை வாழவைப்பாய்
உன்னருளே எமக்கென்றும் உய்தி தருமைய்யா
கொம்புச் சந்தி இருந்தருளும் பிள்ளையாரே துணையிருப்பாய்

தமிழ் ஒலிக்கும் திருநாட்டில் கோயில் கொண்ட திருமகனே
தவறில்லா நல்வாழ்வைத் தந்தெம்மை வாழவைப்பாய்
உன்னருளே எமக்கென்றும் உய்தி தருமைய்யா
கொம்புச் சந்தி இருந்தருளும் பிள்ளையாரே துணையிருப்பாய்

காத்து அருளளிக்க கோயில் கொண்ட திருமகனே
கரவில்லா மனநிலையைத் தந்தெம்மை வாழவைப்பாய்
உன்னருளே எமக்கென்றும் உய்தி தருமைய்யா
கொம்புச் சந்தி இருந்தருளும் பிள்ளையாரே துணையிருப்பாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.