HTML tutorial

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்கொல்ல வனப்பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக சென்ற பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 34,41 வயதுடைய இருவர் வெல்கொல்ல வனப்பகுதியில் வைத்து துப்பாக்கி (Shot gun), மிருகங்களுக்காக வைக்கப்படும் அக்கப்பட்டாசு எனப்படும் போலை வெடி ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களும் பதுளை பிரதேசத்தில் இருந்து பசறை வெல்கொல்ல பகுதிக்கு வருகை தந்து வேட்டையாடுவதில் மிகவும் பரிச்சயம் உள்ளவர்கள் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் இன்றைய தினம் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட உள்ளதாக
பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா