சப்ரகமுவ மாகாணம்- கேகாலை மாவட்டம்- எட்டியாந்தோட்டை அருள்மிகு ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கோயில்

மலைசூழ்ந்த திருவிடத்தில் வந்தமர்ந்த விநாயகர்
மலைப்பில்லா பெருவாழ்வை எமக்கென்றும் தந்தருள்வார்
நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும்
எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம்

அலைபோல வருந்துன்பம் தடுத்தருளும் விநாயகர்
அச்சமில்லா மனவுறுதி எமக்கென்றும் தந்தருள்வார்
நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும்
எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம்

கலைகளின் காவலனாய் இருந்தருளும் விநாயகர் கலக்கமில்லா மனத்தினையே எமக்கென்றும் தந்தருள்வார்
நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும்
எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம்

நிலையில்லா இவ்வுலகில் நிலைத்து நிற்கும் விநாயகர்
நிம்மதி நிறை மனத்தினையே எமக்கென்றும் தந்தருள்வார்
நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும்
எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம்

கவலையில்லா நல்லருளை வழங்குகின்ற விநாயகர்
மகிழ்வுநிறை மனத்தினையே எமக்கென்றும் தந்தருள்வார்
நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும்
எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம்

தெளிவாக வழிகாட்டி வாழவைக்கும் விநாயகர்
தொல்லையற்ற மனத்தினையே எமக்கென்றும் தந்தருள்வார்
நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும்
எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.