வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- புத்தளம் இந்து மத்திய கல்லூரி- அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
அழகுமுகம் கொண்டிருந்து அன்பு செய்யும் வேல்முருகா
அனைத்துலகும் ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா
நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு
புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா
வெற்றி வேல் தாங்கி நின்று காப்பளிக்கும் வேல்முருகா
வள்ளியம்மை அருகுகொண்டு ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா
நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு
புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா
அறிவுதந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் வேல்முருகா
அச்சம் அகற்றியெங்கும் ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா
நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு
புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா
மயிலேறி உலகளந்த மாமணியே வேல்முருகா
மதிதவறா நெறிநின்று ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா
நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு
புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா
வளமளித்து நலமளித்துக் காத்தருளும் வேல்முருகா
வாழ்வில் நலமளித்து என்றும் ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா
நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு
புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா
காவல் தந்து வழிநடத்தி அரவணைக்கும் வேல்முருகா
என்றும் உடனிருந்து ஏற்றமிகு ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா
நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு
புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.