சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம், இரத்தினபுரி நகரம், அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்

மலை சூழ்ந்த திருநகரில் இருந்தருளும் சிவனே
மதிதந்து வழிநடத்த வரவேண்டும் ஐயா
தவறில்லா நேர்வழியில் நாம் என்றும் செல்ல
அருள் தந்து ஆதரிப்பாய் இரத்தினேஸ்வரத்துறை சிவனே

இரத்தினபுரி மாநகரில் கோயில் கொண்ட சிவனே
இருள் சூழா வாழ்வு தர வரவேண்டும் ஐயா
தவறில்லா நேர்வழியில் நாம் என்றும் செல்ல
அருள் தந்து ஆதரிப்பாய் இரத்தினேஸ்வரத்துறை சிவனே

அறிவு தந்து ஆற்றல் தந்து வழிநடத்தும் சிவனே
அமைதி நிறை வாழ்வு தர வரவேண்டும் ஐயா
தவறில்லா நேர்வழியில் நாம் என்றும் செல்ல
அருள் தந்து ஆதரிப்பாய் இரத்தினேஸ்வரத்துறை சிவனே

கங்கை அம்மை முடிகொண்டு காத்தருளும் சிவனே
கலக்கமில்லா வாழ்வுதர வரவேண்டும் ஐயா
தவறில்லா நேர்வழியில் நாம் என்றும் செல்ல
அருள் தந்து ஆதரிப்பாய் இரத்தினேஸ்வரத்துறை சிவனே

ஆணவத்தை நீக்கி அமைதிவழி வழிநடத்தும் சிவனே
அஞ்சாத வாழ்வுதர வரவேண்டும் ஐயா
தவறில்லா நேர்வழியில் நாம் என்றும் செல்ல
அருள் தந்து ஆதரிப்பாய் இரத்தினேஸ்வரத்துறை சிவனே

தொழுது நிற்கும் பக்தர்களின் துணையிருக்கும் சிவனே
தொல்லையில்லா வாழ்வுதர வரவேண்டும் ஐயா
தவறில்லா நேர்வழியில் நாம் என்றும் செல்ல
அருள் தந்து ஆதரிப்பாய் இரத்தினேஸ்வரத்துறை சிவனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.