HTML tutorial

              புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி கலையரங்கின் கூரையை உடைத்துக் கொண்டு களவெடுக்கும் நோக்கில் இனம் தெரியாத நபர்கள் மண்டபத்தில் நேற்று இரவு புகுந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் புஸ்ஸல்லாவ போலீஸ் நிலையத்தில் பாடசாலை நிர்வாகம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டதற்கு இணங்க கண்டியிலிருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கள்ளணை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

இதன் பயனாக போலீசாருக்கு கள்ளன் தொடர்பான தகவல் கிடைக்கப்பட்டுள்ளது டன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

குறித்த கள்ளர்கள் ஏதோ காரணத்தால் பாடசாலையிலிருந்து எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பாடசாலை நிர்வாகம் உட்பட புஸ்ஸல்லாவ போலீசாருக்கு எமது நன்றிகள்

பழைய மாணவர் சங்கம்

சரஸ்வதி மத்திய கல்லூரி