வடமத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டம் அனுராதபுரம் பழைய நகரம் அருள்மிகு சிவன் திருக்கோயில்

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியான சிவனே
அனுராதபுர மண்ணில் மறைந்துறையும் ஐயா
வெளிப்பட்டு வந்துவிடு பழம் பெருமை உணர்த்திவிடு
பழைய நகர் மறைந்துறையும் சிவனே எழுந்தருள்வாய்

எல்லாள மாமன்னன் ஆண்ட நிலம் உறையும் சிவனே
எவ்வளவு நாள் மறைந்துறையப் போகின்றாய் ஐயா
வெளிப்பட்டு வந்துவிடு பழம் பெருமை உணர்த்திவிடு
பழைய நகர் மறைந்துறையும் சிவனே எழுந்தருள்வாய்

தீமைகளைத் துடைத்தெறிய தோன்றுகின்ற சிவனே
தீயபகை கொடுமைகளைத் தடுக்க வா ஐயா
வெளிப்பட்டு வந்துவிடு பழம் பெருமை உணர்த்திவிடு
பழைய நகர் மறைந்துறையும் சிவனே எழுந்தருள்வாய்

அறுபத்து நான்கு கலைகளையும் ஆளுகின்ற சிவனே
அல்லல் தடுத்தெம்மை ஆட்கொள்ள உடன் வந்துவிடு
வெளிப்பட்டு வந்துவிடு பழம் பெருமை உணர்த்திவிடு
பழைய நகர் மறைந்துறையும் சிவனே எழுந்தருள்வாய்

பஞ்ச பூதங்களையும் இயக்கும் எங்கள் சிவனே
பரிதவிக்கும் நிலை போக்க விரைந்துவா ஐயா
வெளிப்பட்டு வந்துவிடு பழம் பெருமை உணர்த்திவிடு
பழைய நகர் மறைந்துறையும் சிவனே எழுந்தருள்வாய்

உமையவளை அருகுகொண்டு அருளளிக்கும் சிவனே
உண்மையெங்கும் ஒளிரச் செய்ய விரைந்துவா ஐயா
வெளிப்பட்டு வந்துவிடு பழம் பெருமை உணர்த்திவிடு
பழைய நகர் மறைந்துறையும் சிவனே எழுந்தருள்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.