HTML tutorial
துருக்கியின் தென்கிழக்கு பகுதியிலும் அதனை அடுத்துள்ள சிரியாவின் எல்லை பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (06) ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரிய நாட்டு சுகாதார அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள பிந்திய தகவலில் 237 பேர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளிலும் 100 மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளன. அவற்றில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்யைடுத்து துருக்கியில் அவசர கால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளின் போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை 3.20 மணிக்கு 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசியன்டெப் இடத்தில்  மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.
துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை ஏற்பட்ட  நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டைய நாடுகளிலும் உணரப்பட்டது.
துருக்கியை தொடர்ந்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Aleppo, Latakia, Hama , Tartus ஆகிய இடங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டதுடன், 600 க்கு  மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.