வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், புத்தளம், முந்தல் கருங்காலிச்சோலை, அருள்மிகு கல்யாண முருகன் திருக்கோயில்

புத்தளம் பெருநிலத்தில் கோயில் கொண்ட வேல்முருகா
புத்துணர்வு தந்தெமக்கு எழுச்சி தரவாருமைய்யா
என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட
கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா

வெற்றி வேல் தாங்கி நின்று நலமளிக்கும் வேல்முருகா
வெற்றிகளை நாம் பெற்று வாழ வழி தரவாருமைய்யா
என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட
கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா

சூரனை அடக்கி அருள்தந்த வேல்முருகா
சுற்றமெல்லாம் நலமடைந்து எழுச்சி தரவாருமைய்யா
என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட
கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா

தெய்வானைத் திருமகளை அருகு கொண்ட வேல்முருகா
தெளிந்த மனம் கொண்டவராய் வாழும் வழி தரவாருமைய்யா
என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட
கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா

துணிவு தந்து ஆற்றல் தந்து துயர் போக்கும் வேல்முருகா
தொல்லையில்லா வாழ்வு தரவாருமைய்யா
என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட
கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா

விநாயகருக்கு இளையவராய் வந்துதித்த வேல்முருகா
வீரமிகு மனத்துடனே வெற்றிபெற்ற வாழ்வு தரவாருமைய்யா
என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட
கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.