வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- கந்தரோடை அருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் திருக்கோயில்

வளம் கொண்ட தமிழ் மண்ணில் கோயில் கொண்ட பிள்ளையாரே
வளமான பெருவாழ்வை எமக்களிக்க வேண்டுமைய்யா
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட
துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே

கந்தரோடை பழம் நகரில் கோயில் கொண்ட பிள்ளையாரே
கரவில்லா மனம் கொண்டு வாழ வழி வேண்டுமைய்யா
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட
துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே

வடஇலங்கை காட்சி தர கோயில் கொண்ட பிள்ளையாரே
வற்றாத கருணையினை எமக்களிக்க வேண்டுமைய்யா
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட
துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே

கேட்கும் வரம் தந்தெமக்கு ஆசிதர கோயில் கொண்ட பிள்ளையாரே
கேடில்லா நல்வாழ்வை எமக்களிக்க வேண்டுமைய்யா
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட
துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே

மருதநிலச் சூழலிலே கோயில் கொண்ட பிள்ளையாரே
மதிதவறா நெறிநின்று வாழ வழி வேண்டுமைய்யா
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட
துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே

வனப்புமிகு திருக்கோயில் கொண்டவரே பிள்ளையாரே
வளமான எதிர்காலம் பெற்றுய்ய வழி வேண்டுமைய்யா
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட
துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.