பாராளுமன்றத்துக்கு வெளியே பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்று எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறு இவர்கள் முன்​னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, 9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் குறத்த போராட்டம் நடைபெறுகின்றமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.