தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஓல்கோட் மாவத்தையின் ஒரு மருங்கு வீதி மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியையும் பொலிஸார் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.