533 N இராகலை தோட்டத்தில் மக்கள் சேவையே மகேசன் சேவை என பல்வேறு துறைகளில் தனது சேவைகளை மக்களுக்கு வழங்கி மக்களின் மனம் வென்று இடமாற்றம் பெற்று சென்ற கிராம அலுவலர் ரவீந்திரராஜா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2023.02.07ம் திகதி இராகலை ஸ்ரீ பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலய சிவசக்தி மஹால் திருமண மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதனை 533 N இராகலைத் தோட்டத்தின் டயமன் கிராம அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இக்கூட்டத்தில் டயமன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் இராகலை தோட்ட பொதுமக்கள் போன்றோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இராகலைத் தோட்டத்திற்கு புதிதாக கடமையை பொறுப்பேற்ற கிராம அலுவலர் வீ.திருப்பதி அவர்களையும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.சந்திரசேகரன் மற்றும் ஆன்மீக தொண்டாற்றிவரும் ஸ்ரீ பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலயத்தின் பிரதம குரு தேசகீர்த்தி சிவஸ்ரீ சிவராஜா குருக்கள் அவர்களுக்கும் இராகலைத் தோட்டத்தில் பல்வேறு சமய கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி எமது சமூகத்தை வழிப்படுத்திக் கொண்டிருக்கும் P.G.குணசேகர ஐயா ஆகியோருக்கும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டயமன் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.