HTML tutorial
பொரளை தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுநீரக கொள்வனவில் ஈடுபடும் தரகராக செயற்பட்ட இவருக்கு கடந்த மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்திருந்தது.

எவ்வாறாயினும், நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நாட்டிற்கு செல்ல முற்பட்ட போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியில் கையடக்கத் தொலைபேசி உபகரணங்களை விற்பனை செய்பவர் எனவும், குறித்த வைத்தியசாலையின் ஊழியர் போன்று இந்த மோசடிக்கு உதவியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.