HTML tutorial

வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம் – நாத்தாண்டிய மெத கொற்றாரமுல்லை- அருள்மிகு ஸ்ரீ ஐயனார் திருக்கோயில்

துன்பங்கள் அண்டாமல் துணையிருந்து காவல் செய்யும் ஐயனார்
துணையிருப்பார், அருள் தருவார் ஆறுதலும்தான் தருவார்
சிந்தையிலே இருத்தியவர் நாமம் போற்றிடுவோம்
வளமளித்து வாழவைப்பார்
கொற்றாரமுல்லை கோயில் கொண்ட எங்கள் ஐயனார் உடனிருப்பார்

நன்மைகள் பெருகிவிட நாமென்றும் நலமடைய அருளுகின்ற ஐயனார்
நாளும் பொழுதும் காவல் செய்து காத்தருள்வார் நலமளிப்பார்
சிந்தையிலே இருத்தியவர் நாமம் போற்றிடுவோம்
வளமளித்து வாழவைப்பார்
கொற்றாரமுல்லை கோயில் கொண்ட எங்கள் ஐயனார் உடனிருப்பார்

செல்லும் வழி சீர்செய்து காவல் செய்யும் ஐயனார்
சுகம் தருவார், வளம் தருவார் சூழ்நிலையைச் சீர்செய்வார்
சிந்தையிலே இருத்தியவர் நாமம் போற்றிடுவோம்
வளமளித்து வாழவைப்பார்
கொற்றாரமுல்லை கோயில் கொண்ட எங்கள் ஐயனார் உடனிருப்பார்

மேற்கிலங்கை இருந்தெம்மைக் காத்தருளும் ஐயனார்
மேன்மை தந்து வாழவைப்பார் வெற்றிகளைத் தந்திடுவார்
சிந்தையிலே இருத்தியவர் நாமம் போற்றிடுவோம்
வளமளித்து வாழவைப்பார்
கொற்றாரமுல்லை கோயில் கொண்ட எங்கள் ஐயனார் உடனிருப்பார்

வாளேந்தி நின்றிருந்து வழிகாட்டும் ஐயனார்
வரும் துன்பம் தடுத்திடுவார் வாழும் வழி செய்திடுவார்
சிந்தையிலே இருத்தியவர் நாமம் போற்றிடுவோம்
வளமளித்து வாழவைப்பார்
கொற்றாரமுல்லை கோயில் கொண்ட எங்கள் ஐயனார் உடனிருப்பார்

வெற்றிகள் தந்தெமக்கு ஏற்றம் தரும் ஐயனார்
வேதனைகள் போக்கிடுவார் நிம்மதியும் தந்திடுவார்
சிந்தையிலே இருத்தியவர் நாமம் போற்றிடுவோம்
வளமளித்து வாழவைப்பார்
கொற்றாரமுல்லை கோயில் கொண்ட எங்கள் ஐயனார் உடனிருப்பார்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.