வெல்லவாய நகருக்கு அருகில் (11) காலை 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மொனராகலை மற்றும் புத்தளயை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு புவியியலாளர் குழுக்கள் அந்த பகுதிகளுக்கு சென்றதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
மொனராகலை, புத்தள, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் (10) பிற்பகல் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
எனினும் இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கத்தை தாங்கள் உணரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.