அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு.
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பதியதலாவ வீதியில் தெயஹிகொல்ல பாடசாலைக்கு அருகாமையில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை 3.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் குறித்த நபர் யார் என்ற அடையாளம் காணப்படவில்லை எனவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா