வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பதுளை, மடூல்சீமை , பசறை , லுணுகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமைய பதுளை பொலிஸாரினால் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரான லுணுகலை பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்று மந்தினம் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த அதிபரையும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு மேலும் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் அவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
ராமு தனராஜா