வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- கீரிமலை அருள்மிகு நகுலேசுவரப் பெருமான் திருக்கோயில்
வட இலங்கைக் கரையினிலே வீற்றிருக்கும் சிவனே
வற்றாத கருணையினை எமக்களிக்க வருவாய்
மனஅமைதி தந்தெம்மை வாழவைக்க வேண்டும்
எம்குறைகள் களைந்திடைய்யா நகுலேசுவரப் பெருமானே
நகுலாம்பிகா தேவியை அருகு கொண்ட சிவனே
நல்லருளைத் தந்தெம்மை அணைத்தருள்வாய்
நிம்மதியைத் தந்தெம்மை வாழவைக்க வேண்டும்
எம்குறைகள் களைந்திடைய்யா நகுலேசுவரப் பெருமானே
ஐந்தொழில்கள் புரிந்துலகை ஆட்சி செய்யும் சிவனே
அறநெறியில் நாம் வாழ வழிகாட்ட வருவாய்
அஞ்சாமை தந்தெம்மை வாழவைக்க வேண்டும்
எம்குறைகள் களைந்திடைய்யா நகுலேசுவரப் பெருமானே
ஐந்தெழுத்தில் உறைந்திருந்து அருள் பொழியும் சிவனே
அன்பு நிறை பெருவாழ்வை வாழவழி தருவாய்
ஆதரவு தந்தெம்மை வாழவைக்க வேண்டும்
எம்குறைகள் களைந்திடைய்யா நகுலேசுவரப் பெருமானே
கீரிமலை நற்பதியில் கோயில் கொண்ட சிவனே
கவலையின்றி நாம்வாழ வழிகாட்டி அருள்வாய்
கிலேசமின்றி நாம்வாழ வாழி காட்ட வேண்டும்
எம்குறைகள் களைந்திடைய்யா நகுலேசுவரப் பெருமானே
ஆணவத்தை அடக்கி அருள் பொழியும் சிவனே
ஆதரித்து அரவணைத்துக் காத்திடவே வருவாய்
நிரந்தர நிம்மதிக்கு வாழி காட்ட வேண்டும்
எம்குறைகள் களைந்திடைய்யா நகுலேசுவரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.