சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020,2021,ஆம் ஆண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாணவர்கள் இன்று மாலைக்குள் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மோதலில் பாதிக்கப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.