வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது.
இன்று காலை 6.00 மணியளவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதி சுமார் 12 ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக தியத்தலாவை விமானப்படை முகாமில் இருந்து சுமார் 40 விமான படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இதுவரையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
ராமு தனராஜா