கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையமான IVS Pvt Ltd நேற்று முன்தினமுதல் இடம்பெற்ற பாதுகாப்பு குறித்த சில சம்பவங்கள் காரணமாக மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது.
சகல விண்ணப்பதாரிகளும் IVS Pvt Ltd நிறுவனத்தில் மேற்கொண்ட தமது முன்பதிவுகளை மீள்பதிவுசெய்யுமாறு கோரப்படுகின்றனர்.
அவசரமான கொன்சூலர் அல்லது விசா தேவைகளுக்காக உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசி மூலமாக அணுகவும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
15 பெப்ரவரி 2023