HTML tutorial

சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் இன்றி இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், விசேட திட்டத்தின் கீழ், கடனுக்கான அனுமதியை வழங்க கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சீனாவிடமிருந்து கடன் மறுசீரமைப்புக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள இலங்கை அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும், அதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிய முடிகின்றது.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை இந்தியா மற்றும் பாரிஸ் சமூகம் உள்ளிட்ட கடன் வழங்குநர்கள் வழங்கியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.