வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- வவுனியா- மூலாய் மடு, பேயாடி கூழாங்குளம்- அருள்மிகு முனியப்பர் திருக்கோயில்
பெருவீதி மருகிருந்து வழிகாட்டும் ஐயா
போகும் வழி சீரமைத்து விட வேண்டும் நீயே
காவலாய் இருந்தெம்மைக் காத்தருள வேண்டும்
பேயாடி கூழாங்குழம் உறையும் முனியப்பரே காவல்
காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயா
கருணையுடன் காவல் செய்து காத்தருள்வாய்
வழித் துணையாயிருந் தெமக்கு காவலாய் இருப்பாய்
பேயாடி கூழாங்குழம் உறையும் முனியப்பரே காவல்
சூழவரும் தீமைகளைக் களைந்து விடும் ஐயா
பயணிக்கும் வழியை நீ செப்பனிட வேண்டும்
பயமின்றி பயணிக்க உடனிருக்க வருவாய்
பேயாடி கூழாங்குழம் உறையும் முனியப்பரே காவல்
வீண்பழிகள், குறைகளைத் தீர்த்திடுவாய் ஐயா
செல்லுமிடம் சிறப்படைய வழி செய்ய வேண்டும்
செல்வாக்கு குறையாமல் பார்த்தருள வருவாய்
பேயாடி கூழாங்குழம் உறையும் முனியப்பரே காவல்
உற்ற துணையாயிருந்து ஏற்றம் தரும் ஐயா
தவறில்லா நல்வழியில் பயணிக்க வேண்டும்
திடமான மனவுறுதி தந்தெம்மை வாழவைக்க வருவாய்
பேயாடி கூழாங்குழம் உறையும் முனியப்பரே காவல்
தெளிவான வழிகாட்டி நெறிப்படுத்தும் ஐயா
தொல்லையில்லா நல்வழியில் பயணிக்க வேண்டும்
துணிவு கொண்டு எதிர்காலம் எதிர்நோக்க வேண்டும்
பேயாடி கூழாங்குழம் உறையும் முனியப்பரே காவல்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.