கண்டி , பதுளை பேருந்து ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டு வருவதாக பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் பேருந்து நிலையத்திற்கு சென்று குறித்த பேருந்தை அவதானித்த போது பேருந்தில் வந்த 28 வயதுடைய நபர் ஒருவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரிடம் பொதி செய்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை பதுளை நபரிடம் கொடுக்க முற்பட்ட வேளையில் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டியிலிருந்து வருகை தந்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டதோடு அவரிடமிருந்து 6350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபரிடம் ஹெரோயினை பெற்றுக்கொள்ள வந்த 34வயதுடைய நபர் தப்பிச்செல்ல முற்பட்ட வேளை பொலிஸாரினால் துரத்தி பிடிக்கப்பட்டார்.
குறித்த நபரிடம் சோதனையை மேற்கொண்ட போது அவரிடம் இருந்து 150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்த பதுளை பொலிஸார் கண்டி பிரதேசத்தில் இருந்து வந்த 28 வயதுடைய நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக பதுளை க்கு வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும். பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா