கொழும்பிலுள்ள இந்திய விசா நிலையம், விசா மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தையும் நேற்று முதல் மீண்டும் (2023 பெப்ரவரி 20 ) வழங்க ஆரம்பித்துள்ளது.
அதன்படி. விசா மற்றும் பிற சேவைகளுக்கான வழக்கமான செயல்பாடுகளை இந்த அலுவலகம் நேற்று முதல் அர்பித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, விசா விண்ணப்ப நிலையம் கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.