மலையக மக்களால் தனது இன அடையாளங்களை காப்பாற்றும் கூத்து ஆற்றுகை வடிவமாக பல கூத்துக்கள் ,நாடகங்கள் காணப்படுகின்றன.
அதில் தாய் கூத்தாக காமன் கூத்து அல்லது காமன்டி பண்டிகை காணப்படுகின்றுது .
ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் இனத்தின் அடையாளங்களை கலாச்சாரங்களை பண்பாடுகளை அழிக்க வேண்டும்.
தமது பண்பாட்டுக்களை அழிக்கப்பெற்றால் இனம் தானாக அழிந்து போகும் .நம் மலையக இனத்திற்க்கு என்று இருநூறு வருடங்கள் வரலாறு உண்டு ,அந்த வரலாற்று இன பாதுகாப்பை செப்பலடன் பூசாரி டிவிஷன் பொகவந்தலாவ பிரதேசத்தை கொண்ட இளைஞர்கள் சாதித்து காட்டியுள்ளனர் .
சுமார் 12 வருடங்களிற்க்கு பிறகு 2023.02.25அன்று காமன்கூத்து மீள்ளுயிர் பெற்று விமர்சையாக செய்து முடித்துள்ளார்கள் .
தோட்ட இளைஞர்கள் ,பொதுமக்கள் பொருளாதார சிக்கல்கள் மத்தியில் இனபாதுகாப்பிற்க்காக தோட்ட நிர்வாக சபை, இளைஞர்களின் கூட்டுமுயற்சியாலும் பல்லிணமக்கள் பங்குபற்றல் பங்களிப்போடும், சிறப்பாக செய்வதற்க்கு சாத்தியமானது போதைப்பொருள் சீரழிவு மத்தியில் இளைஞர்களின் இவ்முயற்சி ஊர்மக்களிற்க்கும் ஏனைய பிரதேச மக்களிற்க்கும் எடுத்துக்காட்டாக அமைகிறன.
சத்தியநாதன் கிளின்டன்
கிழக்குப்பல்கலைக்கழகம் (Svias)