HTML tutorial

பேராதனை பல்கலைக்கழக மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமாக வீரியமுள்ள மருந்து ஒன்றை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று (28) இரவு, மாணவி தங்கியிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மலலசேகர மாணவர் விடுதியில் குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்ததை ஏனைய மாணவர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர், நேற்று இரவு 11:15 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (01) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அபேவர்தன முதலிகே டொன் வித்யானி மதுமாலிகா டி சில்வா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.