மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் மருதானை கப்பித்தாவத்தை அருள்மிகு கைலாசநாத சுவாமி சிவன் திருக்கோயில்
மும்மூர்த்திகளில் முதல்வனாய் வீற்றிருக்கும் சிவனே
ஐந்தொழில்கள் ஆற்றி உலகை ஆளுகின்ற பேரருளே
உள்ளத்தில் உறைந்திருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா
கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா
தென்திசையில் வீற்றிருந்து அருள்பொழியும் சிவனே
தெவிட்டாத நல்லுறவை அருளுகின்ற பேரருளே
தெளிவான மனநிலையை எமைக்காக்க வேண்டுமைய்யா
கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா
கங்கை அம்மை முடிகொண்டு உலகாளும் சிவனே
காவல் செய்து உயிரினங்கள் ஆளுகின்ற பேரருளே
சிந்தையிலே நிறைந்திருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா
கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா
தொன்மைமிகு அறநெறியின் நாயகனே சிவனே
தொய்வின்றி வாழும் வழி காட்டுகின்ற போரருளே
உதிரத்தில் நீயிருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா
கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா
உமையம்மை உடன் கொண்டு உயர்வளிக்கும் சிவனே
உயிர்ப்பளித்து உலகினையே இயக்குகின்ற பேரருளே
இல்லங்களில் உறைந்திருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா
கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா
முக்கண்கள் கொண்டு உலகை ஆட்கொள்ளும் சிவனே
முத்தமிழின் நாயகனாய் இருந்தருளும் சிவனே
சக்தியைத் தந்தென்றும் எமைக்காக்க வேண்டுமைய்யா
கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.