HTML tutorial

ஹப்புத்தளை பெரகலை கீழ் வியாரகலை பகுதியில் மரக்கறி கடைக்குள் புகுந்த இருவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி கழுத்தில் அணிந்திருந்த தாலி உட்பட நான்கு பவுன் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர்.

இதன்போது ஹப்புதளை பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹப்புதளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் பெரகளை பிளகவுட் பகுதியில் வைத்து உந்துருலியில் பயணித்த இருவரையும் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது உந்துருலியில் இலக்கதகடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டு இருந்துள்ளது

இவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இருவரையும் சோதனைகுட்படுத்திய போது இவர்களிடம் இருந்து தாலி உட்பட தங்க சங்கிலியையும் மீட்டுள்ளனர் இதன் போது 49.50வயதுடைய இருவரையும் கைதுசெய்துள்ளனர்

சந்தேக நபர்கள் இன்று பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படவுள்ளதாக ஹப்புதளை பொலிஸார் தெரிவித்தனர்

ராமு தனராஜா