கடந்த ஜனவரி 20ம் திகதி நானுஓயா – ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர். இதில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்கள் மாணவர்களிடம் சேர்க்கப்பட்ட 14 லட்சம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது .இதில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கினர் , இதில் வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் வங்கி கணக்கில் கல்லூரியில் காப்புறுதி திட்டம் ஊடாக 8 லட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டது மற்றும் இறந்தவர்களின் திதி கொடுப்பதற்கான செலவினையும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
குறித்த நிகழ்வு நேற்று 03/03/23 வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் நந்தன கலபொட , நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் , பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.