கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் 18 வளைவு வீதி நேற்று (04) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாக வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், குறித்த வீதியின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரன்தெனிகல – பதுளை வீதி அல்லது ராஜ மாவத்தை தெண்ணேகும்புர மணிக்கூட்டு கோபுரச் சந்திக்கு அருகில் வந்து சந்தி 21 இல் இடப்புறமாகத் திரும்பி பதுளை – மஹியங்கனை வீதியில் மஹியங்கனை நகரை அடையலாம்.
இதேவேளை, வீதியில் சரிந்து வீழ்ந்த மண் அகற்றும் பணி இன்று காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வந்து அப்பகுதியை ஆய்வு செய்து பின்னர் மண் அகற்றும் பணியை மேற்கொள்வார்கள் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.