ஹட்டனை சேர்ந்த இளம் யுவதி தன்னை 60 வயது மதிக்கத்தக்க வீட்டு எஜமான் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மொரட்டுவ போலீஸ் நிலையத்தில் நேற்று (05/03/23) இரவு 11 மணி அளவில் முறைப்பாறொன்றை குறித்த வீட்டில் இருந்து தப்பிய நிலையில் பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குறித்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி நோர்வூட்டை சேர்ந்த வீட்டு தரகர் மூலம் வீட்டு பணிக்காக அமரத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியா சந்தேகநபரான வீட்டு உரிமையாளர் அவ்வப்போது அடிப்பதும் ,உடலை தட்டுவதுமாய் இருந்துகிறார் ,மேலும் குறித்த வீட்டில் உள்ள ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் வெளியில் பயணம் செய்திருந்த நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குறித்த பெண்ணை மோசமான முறையில் பாலியல் ரீதியிலான் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் பெண் வீட்டில் இருந்து தப்பிய நிலையில் பாதையில் சென்ற ஒருவரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசரணைகளை மொறட்டுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.