கடந்த சனிக்கிழமை (04/03/23) அன்று ஹட்டன் புனிதஜோன்பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் நடாத்திய நுவரெலியா மாவட்ட பாடசாலைகளின் கபொத (சாத )மாணவர்களுக்கிடையிலான இணைந்த கணித,விஞ்ஞான திறன்காண் போட்டியில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி முதல் இடம் பெற்றுள்ளது.
ஒரு பாடசாலையிலிருந்து தலா 5மாணவர்கள் வீதம் முப்பதிற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு கொண்ட இப்போட்டியில் நமது மாணவர்கள் 1ம்,3ம்,4ம்,8ம் மற்றும் 10ம் இடங்களை பெற்று குழு நிலையில் முதலாமிடத்தையும் சுவீகரித்துள்ளனர்.