HTML tutorial

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நு/லோவர்கிரன்லி தவி யில் இன்று காலை விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலைஅதிபர் பாலகிருஸ்ணன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விசேட விருந்தினர் சமூகசெயற்பாட்டாளர் அ.ரெ.அருட்செல்வம் கலந்து சிறப்பித்திருந்தார்.

பாடசாலை ஆசிரியைகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து மகளிர் தினம் தொடர்பாக விசேட உரையினை சமூகசெயற்பாட்டாளர்
அ.ரெ.அருட்செல்வம் அவர்களும் பாடசாலை அதிபர் பாலகிருஸ்ணன் அவர்களும் நிகழ்த்தினர்.

பால்நிலை சமத்துவம் பெண்களி உரிமைகள் கல்வியின் அவசியம் பெண் தலைமைத்துவம் அரசியல்,சமூக,கலாசார பொருளாதார,அபிவிருத்தியில் பெண்களின பங்களிப்பு பற்றி பேசப்பட்டது.

பாடசாலையில் கடமையாற்றும் பெண் ஆசிரியர்கள் தமது மகிழ்ச்சியை வெளிபடுத்தி இன்றைய நாளை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியைகள் சார்பில் திருமதி.தமிழ்செல்வி நன்றி பாராட்டினார்.