கேகாலை – ருவன்வெல்ல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சுமார் 70 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த ஆணின் சடலம் இரத்தக்காயங்களுடன் காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.