HTML tutorial

 

சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிசற்சங்க ரீதியான தீர்வுகளை காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய விசேட குழுவின் உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முகமாக கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியான விடயங்களை கையாள மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் இரண்டாவது கூட்டம் கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.