HTML tutorial

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் கொடுப்பனவை ,இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பரீட்சை மேற்பார்வைப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின், கொடுப்பனவையும் 2000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தாமதமானால் அது ஏனைய பரீட்சைகள் மற்றும் வழமையான பாடசாலை தவணைகளையும் பாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மாணவர்களின், எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒன்றிணையுமாறு ஆசிரியர் சங்கங்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.