பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்த பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் இருந்து 6300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது
சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா