புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்தை சீனி தொழிற்சாலைக்கு செல்லும் வீதியில் சீனி தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிவந்த லொறி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த உந்துருளியின் மீது மோதி சுமார் 50 மீற்றர் தூரம் வரை லொறியினால் உந்துருளி இழுத்து செல்லப்பட்டுள்ளது.
இதன்போது உந்துருளியில் பயணித்த புருத்த மின்ப்பே பகுதியை சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக புத்தளை வைத்தியசாலையின் வைத்தியரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது யுகதலாவ பகுதியை சேர்ந்த 42 வயதுடைய லொறியின் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இருப்பினும் அப்பிரதேசத்தில் உள்ள மக்களினால் குறித்த லொறி தாக்கப்பட்டு சேதமாக்கப்ட்டுள்ளதாக புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா