கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 20 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இன்று பசறை பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக பசறையில் இருந்து மடுல்சிமை மற்றும் பிட்டமாறுவ எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் பசறை பொது மயானத்திற்கு அருகாமையில் பாரிய மண்மேட்டுடன் மரம்...